முயற்சியே உயர்ச்சி என்பதற்கு முன்னுதாரணமான கனடா தமிழன்!

You are currently viewing முயற்சியே உயர்ச்சி என்பதற்கு முன்னுதாரணமான கனடா தமிழன்!
ஒரு ஆசிரியருக்குரிய கல்வித் தகுதி இருந்தும், பாரபட்சம் காட்டப்பட்ட ஈழத் தமிழர் ஒருவர் போராடி தன் உரிமையை மீட்டுக்கொண்டுள்ளார்.

திருஞானசம்பந்தர் திருக்குமரன் எனும் குறித்த நபர் 2012ம் ஆண்டு கனடாவுக்கு புலம்பெயர்ந்தவர்.

ஈழத் தமிழரான திருக்குமரன், ஈழத்திலும், அவுஸ்திரேலியாவிலும் கல்வி பயின்று வேதியியலில் இளம் அறிவியல் பட்டமும் ஒரு முதுகலைப் பட்டயப்படிப்பும் முடித்து அதற்கான சான்றிதழ்களையும் முறைப்படி பெற்றுள்ளார்.

ஆனால், Ontario College of Teachers (OCT) என்னும் ஆசிரியர்களுக்கான ஒழுங்கமைப்பு, திருக்குமரனின் சான்றிதழ்களை அங்கீகரிக்க மறுத்து, ஆசிரியராக பணியாற்ற அவருக்கு அனுமதி மறுத்துள்ளது.

ஆகவே, அந்த அமைப்பின் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார் திருக்குமரன். சட்ட ரீதியாக அந்த அமைப்பை எதிர்கொள்ள 10,000 டொலர்கள் செலவு செய்துள்ளார்.

இரண்டு ஆண்டுகள் போராட்டத்துக்குப் பின், தற்போது அவரது சான்றிதழ்களை அங்கீகரித்து, ஒன்ராறியோவில் கல்வி கற்பிப்பதற்கு அவருக்கு சான்றளித்துள்ளது அந்த அமைப்பு.

தனது குடும்பத்தினர், சகாக்கள், முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்கள் ஆகியோரின் ஊக்குவிப்பு இல்லாதிருந்தால், தன்னால் மட்டும் இந்த வெற்றி சாத்தியமாகியிருக்காது என்கிறார்.

திருக்குமரன் தனது வழக்கில் வெற்றிபெற்றுவிட்டார் என்றாலும், பல திறமைவாய்ந்த புலம்பெயர்ந்தோர், கனடாவில் இன்னமும் தாங்கள் சார்ந்த துறைகளுக்குள் நுழைய பல தடைகளை எதிர்கொள்ளத்தான் செய்கிறார்கள்.

கனடாவில் பணியாளர் பற்றாக்குறை எந்த அளவுக்கு நிலவுகிறது என்பது உலகத்துக்கே தெரியும்.

ஆனாலும், வெளிநாடுகளில் பயிற்சி பெற்ற புலம்பெயர்ந்தோரில் வெறும் 25 சதவிகிதத்தினர் மட்டுமே ஒன்ராறியோ மாகாணத்தில், தங்கள் துறை சார்ந்த, முறைப்படுத்தப்பட்ட பணிகளில் இணைந்துள்ளார்கள் என்கின்றன சமீபத்திய தரவுகள்.

இந்த நிலை மாறாது, அது அப்படியேதான் இருக்கும் என்கிறார் திருக்குமரன்…

விடயம் என்னவென்றால், எதனால் திருக்குமரனுடைய சான்றிதழ்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை, மேல்முறையீட்டுக்குப்பின் என்ன காரணத்துக்காக Ontario College of Teachers (OCT) என்னும் ஆசிரியர்களுக்கான ஒழுங்கமைப்பு தனது முடிவை மாற்றிக்கொண்டது என்பதைத் தெரிவிக்கமுடியாது என, மாகாணத் தனியுரிமைச் சட்டங்களை மேற்கோள் காட்டி அந்த அமைப்பு கூறிவிட்டது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments