காலஅவகாசம் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையில் கூட்டமைப்பினர் செ.கஜேந்திரன்!

You are currently viewing காலஅவகாசம் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையில் கூட்டமைப்பினர் செ.கஜேந்திரன்!

சுமந்திரன் அவர்கள் தலமையிலான கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை அரசிற்கு காலஅவகாசத்தினை பெற்றுக்கொடுக்கும் முயற்சியில்தான் ஈடுபட்டுள்ளார்கள்  என்று நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
01.01.2021 அன்று முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவிக்கையில்..
ஜ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இந்த நாட்டின் ஜனாதிபதியும் பிரதமரும் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று மீண்டும் மீண்டு சொல்லி வருகின்றார்கள் இவ்வாறான நிலையில் பாதிக்கப்பட்ட மக்களின் தலைமை என்று சொல்லிக்கொண்டிருந்த தமிழ் தலைமைகள் இலங்கை அரசிற்கு கால அவகாசத்தினை பெற்றுக்கொடுப்பதில்தான் அக்கறை செலுத்தினார்கள்.
போர்குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு கொண்டு செல்வதற்கு எந்த முயற்சிகளும் எடுக்கவில்லை அதன் விளைவாக போர்க்குற்றங்கள் சுமத்தப்பட்ட பலர் நாட்டின் முக்கிய தலைவர்களாக கொண்டு வரப்பட்டுள்ளார்கள்.
ஜ.நா மனிதஉரிமை பேரவையில் முக்கியமான விதி  ஒன்று இருக்கின்றது அங்கு எடுக்கப்படும் எந்த தீர்மானமாக இருந்தாலும் பாதிக்கப்படும் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கவேண்டும் 
கடந்த காலங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக ஒப்புதல் கொடுத்தவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்.
மக்களின் விருப்பங்களுக்கு மாறாகவே செய்தார்கள் ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் வாக்களிக்கும் போது போர்க்குற்றவாளிகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லப்படுவார்கள்  என்று சொல்லியதால்தான் கூட்டமைப்பிற்கு மக்கள் வாக்களித்தார்கள்.
வெற்றிபெற்றதன் பின்னர் அதே கூட்டமைப்பினர் ஜ.நா சென்று மக்கள் உள்நாட்டு விசாரணையினை விரும்புகிறார்கள் எங்களுக்கு ஆணை தந்துள்ளார்கள் நாங்கள் சொல்வதுதான் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைப்பாடு என்று காலத்தினை கடத்துவதன் ஊடாகத்தான் தூக்கில் தொங்கவேண்டியவர்கள் நாட்டின் உயர் தலமைக்கு வரும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
இன்றைய ஆட்சியாளர்கள் சீன சார்பு போக்குடையவர்கள் இதனால் இந்தியாவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றார்கள் இவர்களை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்ற தேவை பூகோள ஆதிக்க நிலையில் காணப்படுகின்ற போட்டி இது தமிழர்களுக்கு ஒரு வாய்ப்பினை கொடுக்கின்றது 
தமிழ் தரப்புக்கள் போர்க்குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்வதற்கு சரியான முறையினை  மேற்கொண்டால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லக்கூடிய வாய்ப்புக்கள் உண்டு.
போர் முடிந்து பத்து ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் அபிவிருத்தியும் இல்லை,வேலைவாய்ப்பும் இல்லை,உரிமையும் இல்லை என ஒன்றும் இல்லாத இடத்தில் இந்த நிலையினை ஏற்படுத்திய கூட்டமைப்பினர் இன்றும் ஒருவருட கால அவகாசத்தினை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையில்தான் ஈடுபட்டுள்ளார்கள் .
நா.உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் தலமையிலான கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை அரசிற்கு காலஅவகாசத்தினை பெற்றுக்கொடுக்கும் முயற்சியில்தான் ஈடுபட்டுள்ளார்கள் இந்த விடையத்தில் மக்கள் சரியாக சிந்திக்கவேண்டும்.
இலங்கை அரசாங்கத்தினை ஜெனீவாவிற்குள் முடக்கி காலஅவகாசத்தினை பெற்றுக்கொடுக்கும் கூட்டமைப்பினர் செயற்பாட்டில் இருந்து ஒதுங்கிபோகவேண்டும் என மக்கள் சொல்லவேண்டும் இல்லையேல் இந்த மண்ணினை இழப்பதற்கு நீண்டகாலம் செல்லாது என்றும் அவர் தெரிவித்துள்ளர்

பகிர்ந்துகொள்ள