வானிலை ஆய்வு நிறுவனம் இன்று ஞாயிறு பிற்பகல் முதல் திங்கள் மாலை வரை Trøndelag பகுதியில் கூடுதல் பனிப்பொழிவுக்கான மஞ்சள் எச்சரிக்கையை அனுப்பியுள்ளது.
24 மணி நேரத்தில் 10 முதல் 25 செ.மீ வரை பனி பொழியக்கூடும் என்று எச்சரிக்கை கூறுகின்றது.
இன்று மாலையில் இருந்து, பலத்த காற்று வீசக்கூடும் என்றும் , ஒருவேளை கடற்கரை பகுதியில் சிறிய புயலும் வீசலாம் என்றும் Adresseavisen பத்திரிகைக்கு ஒஸ்லோவில் உள்ள வானிலை ஆய்வு நிறுவனத்தில் வானிலை ஆய்வாளர் Martin Granerød கூறியுள்ளார்.

பனிப்பொழிவு காரணமாக இப்பகுதியில் பாதைகளின் கடினமான நிலைமைகள் குறித்து வாகன ஓட்டுநர்களுக்கு வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
மேலதிக தகவல்: Dagbladet