கால்நடை உரிமையாளர் மீது தாக்குதல் படுகாயம்!

You are currently viewing கால்நடை உரிமையாளர் மீது தாக்குதல் படுகாயம்!


புதுக்குடியிருப்பு கைவேலிப்பகுதியில் கால்நடை உரிமையாளர் ஒருவருக்கும் வயல் செய்கையாளர்களுக்கும் இடையில் கால்நடையால் ஏற்பட்ட பிரச்சனைகாரணமாக கால்நடை உரிமையாளர் ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகி முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இச்சம்பவம் பற்றி தெரியவருகையில்.. கைவேலி பகுதியினை சேர்ந்த உதயகுமார் என்பவரின் கண்டு போட்ட மாடு ஒன்று கடந்த 12.06.2020 அன்று கைவேலி பகுதியில் உள்ள ஒரு விவசாயியின் காணிக்குள் சென்றுள்ளது இதனை அவர்கள் பிடித்து கட்டிவைத்துள்ளார்கள்.


குறித்த மாட்டினை நான் எல்லா இடமும் தேடியும் இல்லாத நிலையில் பொலீஸ் நிலையத்தில் சென்று முறையிட்டுள்ளேன் இன்னிலையில் 13.06.2020 அன்று கைவேலி பகுதி ஒருவரின் வீட்டில் கட்டி வைக்கப்பட்டுள்ளமை தெரியவந்தள்ளதை தொடர்ந்து கமக்கார அமைப்பினரோ மாட்டினை பிடித்தவர்களோ உரிய அதிகாரிகளுக்கு மாடு பிடித்துள்ளமை தொடர்பில் தெரியப்படுத்தாத நிலையில்.


பொலீசாருடன் சென்று மாட்டினை அவிட்டுவிடமாறு கோரினேன் மாடு நெற்பயிரினை மேய்ந்துள்ளது அதற்கு தண்டப்பணம் அறவிடவேண்டும் மாட்டினால் ஏற்பட்ட சேதம் மதிப்பீடு விவசாய போதனாசிரியரால் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் அத எவ்வளவாக இருந்தாலும் நான் தருகின்றேன் மாட்டின் கன்று பால் இல்லாமல் கத்திக்கொண்டிருக்கின்றது அவிட்டு விடுமாறு கோரியபோதும் மாட்டினை விவசாயி கொடுக்காத நிலையில் ஏற்பட்ட முறுகல் காரணமாக மாட்டின் உரிமையாளர் மீது குறித்த விவசாயிகள் தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.


இதன்போது படுகாயமடைந்த மாட்டின் உரிமையாளரான 40 அகவையுடை உதகமார் என்பவர் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது இரத்த காயத்துடன் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து அவர் முல்லைத்தீPவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பகிர்ந்துகொள்ள