ஒஸ்லோவில் உள்ள கால்பந்து மைதானங்கள் மூடப்பட்டிருந்தாலும், பலர் ஒழுங்கற்ற முறையில் கால்பந்து மைதானங்களை பாவித்து வருகின்றனர். இதனால் இப்போது ஒஸ்லோ விளையாட்டு வட்டாரம் நகராட்சி மற்றும் காவல்துறையிடம் உதவி கோரியுள்ளது.
கடந்த வாரம், வைரஸ் தொற்று நோயின் விளைவாக ஒஸ்லோ நகரிலுள்ள அனைத்து நகராட்சி விளையாட்டு மற்றும் நீச்சல் தடாகங்கள் மூடப்பட்டன.
இருப்பினும், பல தனியார் நபர்கள், கழகங்கள் முறையற்ற பயிற்சி செயல்பாட்டிற்காக மூடிய கால்பந்து மைதானங்களை தேர்ந்தெடுத்துள்ளனர். இதனால் ஒஸ்லோ விளையாட்டு வட்டாரம் இப்போது காவல்துறை மற்றும் நகராட்சியின் உதவியைக் கேட்டுள்ளது.
அதே நேரத்தில், மூடிய கால்பந்து மைதானங்களில் முறையற்ற விளையாட்டுப் பயிற்சி நடைபெறுவதை அவதானிக்கும் பொதுமக்கள் உடனடியாக 02800 என்ற இலக்கத்தினுடாக காவல்துறையினருக்கு அறிவிக்க வேண்டும் என்று ஒஸ்லோ விளையாட்டுவட்டாரம் செய்திக்குறிப்பு ஒன்றில் எழுதியுள்ளது.
தனிநபர்கள் அல்லது இரண்டு முதல் மூன்று சிறுவர்கள் விளையாடுமிடத்து அவர்கள் விரட்டப்படமாட்டார்கள் என்று விளையாட்டுவட்டாரம் மேலும் கூறியுள்ளது.
சட்டத்தை மீறும் வகையில் நடைபெறும் இதுபோன்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த ஒஸ்லோ விளையாட்டு வட்டாரம் பொதுமக்களின் உதவியை வேண்டி நிற்பதாக கூறியுள்ளது.
மேலதிக விபரம்: VG