காஸா எல்லையை மீண்டும் கைப்பற்றிய இஸ்ரேல்!

You are currently viewing காஸா எல்லையை மீண்டும் கைப்பற்றிய இஸ்ரேல்!

காஸா எல்லையை இஸ்ரேல் மீண்டும் கைப்பற்றியுள்ளது. பாலஸ்தீனியர்களுடனான மோதலின் 75 ஆண்டுகால வரலாற்றில் மிகக் கடுமையான வான்வழித் தாக்குதல்களை நடத்துவதாகவும் இஸ்ரேல் கூறியது. அதேநேரம் ஹமாஸ் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900 ஆக உயர்ந்துள்ளதாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பெரும்பாலான பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும், தெருக்களிலும், நடன விருந்திலும் சுட்டுக் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான இஸ்ரேலியர்கள் காசாவிற்கு பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.

ஆனால் காஸா அதிகாரிகளின் கூற்றுப்படி, இஸ்ரேலிய தாக்குதலில் சுமார் 700 காசா மக்கள் கொல்லப்பட்டனர். 180,000 காசா மக்கள் வீடற்றவர்களாக உள்ளனர், பலர் தெருக்களில் அல்லது பள்ளிகளில் குவிந்துள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபை கூறியது.

காஸாவில் உள்ள கான் யூனிஸ் மருத்துவமனையில் உள்ள பிணவறை உடல்களால் நிரம்பி வழிகிறது. மேலும், இறந்தவர்களின் உடல்களை வைக்க அதிக இடவசதி இல்லாததால், அவற்றை விரைந்து எடுத்துச் செல்லுமாறு உறவினர்களிடம் மருத்துவர்கள் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தாக்குதலில் பத்திரிக்கையாளர்களும் கொல்லப்பட்டனர். இஸ்ரேலிய ஏவுகணை ஒன்று செய்தி வெளியிட்டுக்கொண்டிருந்த கட்டிடத்தின் மீது மோதியதில் மூன்று காசா பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். இதன் மூலம் காஸாவில் சனிக்கிழமை முதல் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையில், இஸ்ரேலில், சனிக்கிழமை நடந்த தாக்குதலில் இறந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் முழுமையான எண்ணிக்கை இன்னும் கிடைக்கவில்லை.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply