திருகோணமலை, கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் படகு பாதை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், இதுவரை மாணவர்கள் மட்டும் 7 பேர் மரணமடைந்தனர்.
இதனையடுத்து அப்பகுதியில் பெரும் பதற்றமான நிலைமையொன்று தோன்றியுள்ளது.
கிண்ணியா பிரதேச செயலகத்தை மக்கள் முற்றுகையிட்டு அங்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் முன்னெடுக்கின்றனர்.
மேலும் படகு விபத்தில் உயிரிழந்த சிறார்களின் சடலங்கள், பிரேத பரிசோதனைகளுக்காக கிண்ணியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் படகு விபத்தில் மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த கிண்ணியா மக்கள் , திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் இல்லத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இப்படகில் 20பேர் வரை சென்றுள்ளதாக தெரியவருகின்றது.
பிந்திக்கிடைத்த தகவலின் படி
திருகோணமலை – கிண்ணியா குறிஞ்சாக்கேணிப் பகுதியில் மாணவர்களுடன் பயணித்த படகுப் பாதை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. விபத்தில் உயிரிழந்த ஏழு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டிருந்தன. பிந்திய தகவல்களின் படி மாணவர்கள் எண்மர், ஆசிரியை ஒருவர் மற்றும் முதியவர் ஒருவர் ஆகியோரே உயிரிழந்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயணித்த படகு ஒன்றே இவ்வாறு இன்று (23) காலை விபத்துக்கு உள்ளாகி உள்ளது.
குறிஞ்சாங்கேனி பிரதேசத்தில் பால நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வருவதால் அவ்விடத்தில் சேவையில் ஈடுபட்டிருந்த மோட்டார் இழுவைப் படகு ஒன்றே இவ்வாறு கவிழ்ந்துள்ளது.
அத்துடன் மேலும் சிலர் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகும் அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் சிலர் காணாமல் போயுள்ளதுடன், அவர்களை மீட்பதற்கான பணிகள் தொடர்ந் தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறித்த விபத்தில் பலர் மரணித்திருக்கலாமென சந்தேகம் வெளியிடப்படும் நிலையில் தொடர்ந்தும் அங்கு தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மேலும் தெரியவந்துள்ளது.
அத்துடன் துடன் 11 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் நால்வர் கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதேவேஎளை படகின் கொள்ளவை மீறி பயணிகளை ஏற்றிச்சென்றமையாலேயே விபத்து சம்பவித்ததாக மேலும் தெரிவிக்கப்படுகின்ற நிலையில், இச்சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.