கிராமடோர்ஸ்க் மீதான ரஷ்ய தாக்குதலுக்கு பிறகு நடத்தப்பட்ட தாக்குதலில் மிகவும் மோசமான தாக்குதல்

You are currently viewing கிராமடோர்ஸ்க் மீதான ரஷ்ய தாக்குதலுக்கு பிறகு நடத்தப்பட்ட தாக்குதலில் மிகவும் மோசமான தாக்குதல்

உக்ரைனின் டினிப்ரோவில் உள்ள ரயில் நிலையத்தில் ரஷ்ய படைகள் நடத்திய ராக்கெட் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 50 காயமடைந்துள்ளனர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் கிட்டத்தட்ட 182வது நாளை கடந்தும் அமைதி பேச்சுவார்த்தைகளில் தீர்வுகள் எதுவும் எடுக்கப்படாமல் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அந்தவகையில் மத்திய உக்ரைனின் டினிப்ரோவுக்கு அருகில் உள்ள சாப்லைன் நகரில்(Chaplyne) உள்ள ரயில் நிலையம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தி இருந்தது.

இந்த நிலையில் ரஷ்யாவின் இந்த தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 50 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இன்று மாலை ஐ.நா.விடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் இது கிராமடோர்ஸ்க் மீதான ரஷ்ய தாக்குதலுக்கு பிறகு நடத்தப்பட்ட தாக்குதலில் மிகவும் மோசமான தாக்குதல் எனவும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply