கிளிநொச்சியில் காணாமல்போன 13 அகவை சிறுவன்!

You are currently viewing கிளிநொச்சியில் காணாமல்போன 13 அகவை சிறுவன்!

கிளிநொச்சி பொன்நகரைச் சேர்ந்த 13 வயதுடைய சிறுவன் ஒருவன் கடந்த 13ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக, அவரின் பெற்றோர் கிளிநொச்சி சிறீலங்கா காவற்தறையில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சித்திரை புத்தாண்டு புத்தாடைகள் கொள்வனவு செய்வதற்காகச் சென்றிருந்த வேளையில், தண்ணீர் குடிப்பதற்காகச் சென்ற குறித்த சிறுவன், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

பொன் நகர், கிளிநொச்சியை சேர்ந்த பஸ்மின் நவீத் என்கின்ற 13 வயதுடைய சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், சிறீலங்கா காவற்தறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வரும் அதேவேளை, பொதுமக்களின் உதவியையும் குடும்பத்தினர் நாடியுள்ளனர்.

சிறுவன் தொடர்பான தகவல் தெரிந்தால் 0771824506 எனும் தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு உறவினர்கள் கோரியுள்ளனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply