கிளிநொச்சி மாவட்டத்தில் திடீர் என பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக 14 குடும்பங்களைச் சேர்ந்த 42 பேர் பாதிப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்றுப் பிற்பகல் 3 மணியளவில் வானிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக கடும் காற்றுடன் பலத்த மழை சில பகுதிகளில் பதிவாகியுள்ளது.
இதன் காரணமாக கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட செல்வாநகர், கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் வீடுகள் பகுதியளவில் சேதம் அடைந்துள்ளது. குறித்த காலநிலை காரணமாக செல்வாநகர் பகுதியில் 09 குடும்பங்களை சேர்ந்த 25 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 07 வீடுகளின் கூரை பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் மரம் முறிந்து விழுந்ததில் முச்சக்கரவண்டி ஒன்றும் சேதமடைந்துள்ளது.
இதேவேளை கிருஷ்ணபுரம் பகுதியில் 05 குடும்பங்களை சேர்ந்த 17 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 05 வீடுகளின் கூரை பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.