கிளிநொச்சியில் வெடிக்காத நிலையில் இரு குண்டுகள் மீட்பு !

You are currently viewing கிளிநொச்சியில் வெடிக்காத நிலையில் இரு குண்டுகள் மீட்பு !

கிளிநொச்சி- பரந்தன் உமையாள்புரம், விளாவோடை பகுதியில் இரண்டு வெடிக்காத குண்டுகள் நேற்று  (23.1.2026)கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், விளாவோடை பகுதியில் உள்ள நெல் வயல்சாலையின் அருகே, இரண்டு 60மி.மீ வெடிக்காத குண்டுகள் இருப்பதை அந்தப் பகுதி மக்கள் அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி சிறீலங்கா காவற்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த கிளிநொச்சி சிறீலங்கா காவற்துறையினர் குறித்த இடத்தின் பாதுகாப்பை பலப்படுத்தியதுடன் வெடிக்காத இரு குண்டுகளையும் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி சிறீலங்கா காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply