கிளிநொச்சி – அக்கராயன் பிரதான வீதியில் 05 வது மைல் கல் அருகில் நேற்று இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். இயக்கச்சியை சேர்ந்த சிறிகரன் சுபாங்கி என்ற 44 வயதுடைய பெண்ணே சம்பவ இடத்தில் உயிரிழந்தவராவார்.
முறிகண்டிப் பகுதியிலிருந்து முழங்காவில் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் எதிரே வந்த கார் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது .






