கிளிநொச்சி சிறீலங்கா காவற்துறை நிலையத்தில் கைதி மரணம்!

You are currently viewing கிளிநொச்சி சிறீலங்கா காவற்துறை நிலையத்தில் கைதி மரணம்!

கிளிநொச்சி சிறீலங்கா காவற்துறை நிலையத்தில், குடும்பப் பிணக்கு தொடர்பாக விசாரணைக்காக தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த 66 வயது கைதி ஒருவர், நேற்று மதியம் 12:20 மணியளவில் தூக்கிட்டுத் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

கிளிநொச்சி, ரயில் நிலைய வீதியைச் சேர்ந்த இரத்தினம் ராசு என அடையாளம் காணப்பட்ட இவர், தான் அணிந்திருந்த சாரத்தின் ஒரு பகுதியை கிழித்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு கிளிநொச்சி நீதிமன்ற நீதிபதி ஜெமீல் சென்று பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டார்.

கிளிநொச்சி சிறீலங்கா காவற்துறையினர் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply