கிளிநொச்சி விநாயகபுரத்தில் 26 வயது இளைஞன் குத்திக்கொலை!

You are currently viewing கிளிநொச்சி விநாயகபுரத்தில் 26 வயது இளைஞன் குத்திக்கொலை!

கிளிநொச்சி  சிறீலங்கா காவற்துறை பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் கிராமத்தில் 26 வயது இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சிறீலங்கா காவற்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறித்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜன.1) அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

விநாயகபுரத்தைச் சேர்ந்த தவக்குமார் சுரேஸ் என்ற 26 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

குறித்த இளைஞரின் வீட்டுக்குள் புகுந்த நபர்கள், அவரை கத்தியால் குத்தியும், பலமாக தாக்கியும் உள்ளனர்.

இதில் படுகாயமடைந்த அவரை, அயலவர்கள் மீட்டு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.  ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்துவிட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கொலை தொடர்பாக  மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி சிறீலங்கா காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply