கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பகுதியில் குடும்பத் தலைவர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் நேற்றிரவு(24.11.2025) இடம்பெற்றுள்ளது.
56 வயதுடைய கதிரவேலு சிவராசலிங்கம் என்கின்ற குடும்பஸ்தரே குடும்ப தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தின் பின்னர் நேற்றிரவு(24.11.2025) கொலை செய்யப்பட்டவரின் மருமகன், மருமகனின் சிறிய தந்தை இணைந்து தாக்குதலை நடாத்தி தலைமறைவாகி இருந்துள்ளனர்.
சிறீலங்கா காவற்துறையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் சந்தேக நபர்கள் இருவரும் அக்கராயன் பிரதேச சிறீலங்கா காவற்துறையினரால் இரவு 11 மணியளவில் முறிப்பு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் அக்கராயன் குளம் சிறீலங்கா காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.






