கிளியில் சிங்கள காடையர் துப்பாக்கி சூடு ஒருவர் பலி படையினன்கைது!

You are currently viewing கிளியில் சிங்கள காடையர் துப்பாக்கி சூடு ஒருவர் பலி படையினன்கைது!

மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்தவர்களை மறிக்க முயன்றபோது படையினர் மீது மோட்டார் சைக்கிளால் மோதிவிட்டு தப்பி சென்றவர் மீதே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக பளை காவல்துறை தெரிவித்தள்ளது.

நேற்று மாலை முகாலை பகுதியில் படையினர் இளைஞர் ஒருவர் மீத துப்பாக்கி சூடு நடத்தியிருந்தனர். இந்த சம்பவத்தில் திரவியம் இராமலிங்கம் என்ற கெற்பெலி பகுதியை சேர்ந்த 24 வயதான இளைஞன் உயிரிழந்துள்ளான்.

கிளாலி பகுதியில் உள்ள இராணுவ முகாமிற்கு பின்னால் மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த 4 பேரை சிங்கள படையினர் அவதானித்ததுடன் பொலிஸாரின் நடமாட்டத்தை உளவு பார்த்து சொல்லும் ஒருவர் மோட்டார் சைக்கிளில் நடமாடுவதையும் அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த நபரை மறித்து சோதனையிட முயற்சித்தபோது அவர் மோட்டார் சைக்கிளால் படையினரை மோதிவிட்டு தப்பி ஓட முயற்சித்துள்ளார். இதனையடுத்து படையினர் அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த 4 பேர் கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறை தரிவித்துள்ளது.

மேலும் இந்த சம்பவத்தையடுத்து ஏ-9 வீதியை மறித்து இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இன்னிலையில் நேற்று இரவு துப்பாக்கி சூடு நடத்திய படையினனை காவல்தறையினர் கைதுசெய்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

பகிர்ந்துகொள்ள