கிழக்கு மாகாணத்தில் பௌத்த மயமாக்கல் துரிதம்: இராஜாங்க அமைச்சர்கள் வேடிக்கை!

You are currently viewing கிழக்கு மாகாணத்தில் பௌத்த மயமாக்கல் துரிதம்: இராஜாங்க அமைச்சர்கள் வேடிக்கை!

கிழக்கு மாகாணத்தில் பௌத்த மயமாக்கல் துரிதம்: இராஜாங்க அமைச்சர்கள் வேடிக்கை! 1

கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்று வரும் பௌத்தமயமாக்கல் செயற்பாடுகளை, மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துப்படுத்தும், இரு இராஜாங்க அமைச்சர்களும் தட்டிக்கேட்கவில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குற்றஞ்சாட்;டியுள்ளது.

நேற்று  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, அக் கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் இவ்வாறு குற்றஞ்சாட்டினார்.
மேலும் தெரிவிக்கையில்

மட்டக்களப்பை சிங்கள மயமாக்கலின் அடிப்படையில் எல்லைக் கிராமமான கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வடமுனை கிராம சேவகர்பிரில் உள்ள நெலுகல் மலை எனப்படுகின்ற மலையில் எமது மாவட்டத்தின் இரு இராஜாங்க அமைச்சர்களின் ஆசீர்வாதத்துடன் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் புதிதாக விகாரை கட்டும் பணி திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளா் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி காரியாலத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். திட்டமிட்ட அடிப்படையிலே கிழக்கு சிங்கள தேசத்துக்குள் படிப் படியாக கரைந்து கொண்டிருக்கின்றது அம்பாறை. திருகோணமலை மாவட்டம் முழுவதுமாக சிங்கள தேசத்தின் திட்டமிட்ட அபகரிப்பு உட்பட்டு தமிழ் மக்கள் கையில் இருந்து விடுவிக்கப்படுகின்ற மிகப் பெரிய ஆபத்தான நிலைக்கு போயிருக்கின்றது.

அதன் அடுத்த கட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் இதில் எல்லைப்புற கிராமங்கள் சிங்கள தேசத்தினாலும் பெரும்பான்மை இனத்தவர்களால் குறிவைக்கப்பட்டு எல்லைக் கிராமங்கள் அபகரிக்கும் செயற்பாடுகள் படிபடியாக நடந்தேறிவருகின்றது.

அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள வடமுனை கிராமசேவகர் பிரிவிலுள்ள நெலுகல் மலை எனப்படுகின்ற குடும்பி மலையின் பின்பகுதியான இந்த மலையில் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் விகாரை கட்டும் பணியை திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது.

இந்த பகுதியில் பாரிய கட்டிடம் அமைக்கப்பட்டு அதில் இருந்துகொண்டு கட்டுமானப்பணியில் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன்நோக்கம் கிழக்கு மாகாணத்தை முற்றுமுழுதாக சிங்கள பௌத்த தேசத்துக்குள் கரைப்பதற்கான நடவடிக்கையபக பார்க்கின்றோம் வடக்கில் குருந்தூர்மலை வெடுக்குநாறி மலை, கையகப்படுத்தப்பட்டுள்ள இந்த வேளையிலே கிழக்கு மண் சத்தம் இல்லாமல் பறிபோய் கொண்டிருக்கின்றது.

மயிலத்தமடு மேச்சல்தரையில் ரவுண்டப் எனும் புல்லுக்கு அடிக்கும் மருந்தையடித்து மேச்சல் புல்தரைகள் அழிக்கப்பட்டு 8 ஆயிரத்துக்கு மேற்பட்ட மேச்சல் தரை காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளது அதேவேளை மகாவலி ஏ வலயத்துக்குரிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு பெரும்பான்மை இனத்தவர்களை குடியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்தப் பண்ணையாளா்கள் தொடர்ந்து அச்சுறுத்தி அங்கிருந்து அவர்களை வெளியேற்றுகின்ற நடவடிக்கைகள் கச்சிதமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றது இந்த நடவடிக்கைகளுக்கு யார் காரணம் என்பதை மக்கள் மிகத் தெளிவாக விளங்கிகொள்ள வேண்டும்.

இந்த மாவட்டத்தில் 2 இராஜாங்க அமைச்சர்கள் இருக்கின்றனர். இவர்களுடைய பணி சிங்கள தேசத்தினுடைய நிகழ்சி நிரலை அமுல்படுத்துவதுதான் இவர்களது நோக்கமாக இருக்கின்றதே தவிர மட்டக்களப்பு மாவட்ட மக்களை பாதுகாக்க எந்தவொரு முன்னேற்றகரவமான செயற்பாடுகளையும் செய்யவில்லை.

குறிப்பாக மேச்சல்தரை பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் போக முடியாத சூழ்நிலை காணப்பட்டது அதனை எமது கட்சி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அந்த இடத்துக்கு சென்று அந்த பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் கூட செல்லமுடியாது என்பதை சர்வதேசத்துக்கு அம்பலப்படுயிருந்தார்.

இந்த நிலையில் கஜேந்திரகுமார் ஏன் இங்கு வரவேண்டும் என பிள்ளையான் நேற்ரூ முன்தினம் கூட்டத்தில் கேட்டிருந்தார். எனவே கஜேந்திரகுமார் இந்த இடத்துக்கு வரவேண்டியதாக இருந்தது. நீங்கள் ஒரு காட்டிக் கொடுப்பை செய்து தமிழ் மக்களை அழிக்கின்ற செயற்பாட்டில் நின்றதனால் அந்த மக்கள் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளை கூப்பிடவேண்டிய அபாய நிலைக்கு இட்டுச் சென்றீர்கள் எனவே அது ஒரு வெக்க கேடான விடயம். இவரின் செயற்பாடுகளை பார்த்தால் தெரியும் தங்களது பக்கற்றுக்களை நிரப்புகின்ற விதமாக தங்களின் அமைச்சுக்கு ஊடாககிடைக்கின்ற வீதிகளை அமைத்து அதில் 15 வீதம் தரகு பணம் பெற்றுக் கொண்டு அதற்கு வக்காளத்து வாங்குகின்ற ஒப்பந்தகாரர்களை பின்னால் வைத்துக்கொண்டு பேச ஒப்பந்தகாரர்கள் கையடிக்கின்ற செயற்பாட்டை மிகக் கச்சிதமாக பிள்ளையான் செய்துவருகின்றாா் என்றும் சுரேஷ் தெரிவித்தாா்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments