கீழடி அகழாய்வில் புதிய கண்டுபிடிப்பு!!

You are currently viewing கீழடி அகழாய்வில் புதிய கண்டுபிடிப்பு!!

கீழடி அகழாய்வில் அழகிய வேலைப்பாடு களுடன் கூடிய சுடுமண் தொட்டி கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் விரிவான முறையில் 7ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை முதுமக்கள் தாழியுடன் மனித எலும்பு கூடுகள், மண் பானை, சங்கு வளையல்கள், தங்க ஆபரண கம்பி உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப் பட்டுள்ளன.

தற்போது சுடுமண்ணால் ஆன அழகிய வேலைப் பாடுகளுடன் கூடிய தொட்டி கண்டறியப் பட்டுள்ளது. 2 அடி உயரம் 4 அடி சுற்றளவு கொண்டுள்ள இந்த தொட்டிக்கு கீழ் பகுதியில் பல அடுக்கு கொண்ட உறை கிணறு தென்பட வாய்புள்ளதால் அதனை முழுமையாக வெளிக் கொண்டு வரும் பணியில் தொல்லியல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply