திருகோணமலை – குச்சவெளி பகுதியில் படகு கவிழ்ந்து இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.
குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செந்தூர் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.குச்சவெளி மதுரங்குடா – செந்தூர் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய சுதேந்திரன் ஜனூஷன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
செந்தூர் மதுரங்குடா கலப்பு பகுதியில் மீன் பிடிப்பதற்காக இரு இளைஞர்கள் சென்ற போது படகு கவிழ்ந்ததில் இளைஞன் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் மீட்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, உயிரிழந்த இளைஞனின் சடலம் பொலிஸ் விசாரணையின் பின்னர் திருகோணமலை பொதுவைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மேலும் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குச்சவெளி சிறீலங்கா காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.