திலீபன் திருவுருவப்பட ஊர்தி பவனிக்கு தடைவிதிக்க முல்லைத்தீவு நீதிமன்றம் மறுப்பு!

You are currently viewing திலீபன் திருவுருவப்பட ஊர்தி பவனிக்கு தடைவிதிக்க முல்லைத்தீவு நீதிமன்றம் மறுப்பு!

தியாக தீபம் திலீபனின் 36 ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் திருவுருவ படம் தாங்கிய ஊர்தி பவனிக்கு முல்லைத்தீவில் தடை விதிக்குமாறு காவல்துறையினர் விடுத்த கோரிக்கை முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜாவினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

தியாக தீபம் திலீபனின் 36 ஆவது ஆண்டு நினைவு தினத்தை குறித்து அவரின் திருவுருவ படம் தாங்கிய ஊர்தி பவனி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த ஊர்தி கிழக்கு மாகாணத்தில் பயணித்த நிலையில் தற்போது வடமாகாணத்திற்கான பயணத்தை மேற்கொண்டு வருகின்றது. இதனால் ஊர்தி பவனிக்கு முல்லைத்தீவில் தடைவிதிக்குமாறு கோரீ புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, மற்றும் முள்ளியவளை காவல்துறையினர் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் விண்ணப்பித்திருந்தனர்.

இதேவேளை

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் ஊர்திப் பவனியினை தடை செய்யுமாறு யாழ்ப்பாணம் சிறீலங்கா காவல்துறையினர் நேற்று வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இது தொடர்பான நிலைப்பாட்டினை நேரடியாகவோ அல்லது சட்டத்தரணி ஊடாகவோ யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று முன்வைக்குமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments