சீனாவிற்கு உள்ளே இருப்பதைவிட சீனாவிற்கு வெளியேதான் கூடுதலான, புதிய கொரோனா தொற்றுக்கள் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு (WHO) கூறியுள்ளதாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுவரை 33 நாடுகளில் மொத்தம் 80,988 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.
ஐரோப்பிய ஒன்றிய சுகாதார ஆணையர் ஸ்டெல்லா கிரியாக்கிட் (Stella Kyriakide) இன்று புதன்கிழமை “ஐரோப்பாவில் புதிய கொரோனா வைரஸ் தொற்றுக்கள் கவலை அளிக்கிறது, ஆனாலும் அதையிட்டு மக்கள் பீதி அடைய தேவையில்லை” என்று கூறினார்.