கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக, அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம் செய்வதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம் செய்வதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். கொரோனா நோய்தடுப்பு நடவடிக்கைக்காக 50 பில்லியன் டாலர்களை டிரம்ப் ஒதுக்கி உள்ளார். அனைத்து மாகாணங்களிலும் கொரோனா அவசர சிகிச்சை மையங்களை நிறுவ அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம், “ கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் மற்றும் தொடர் நடவடிக்கைகள் மூலமாக நாங்கள் எங்கள் குடிமக்களுக்கான அச்சுறுத்தலைக் கணிசமாகக் குறைப்போம்.” என்று தெரிவித்துள்ளார்.