முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் அமைந்துள்ள பாரதி சிறுவர் இல்லத்தில் பெண் பிள்ளைகள் மீது பணியாளர்கள் பொறுப்புவாய்ந்த நிர்வாகிகள் மற்றும் அத்துமீறல் மற்றும் துஸ்பிரயோகம் போன்ற காரணங்களினால் இரு சிறுமிகள் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
14.03.2022நேற்று பாரதி சிறுவர் இல்லத்தில் கல்விகற்று வந்த இரண்டு சிறுமிகள் அரலி விதை உண்டு ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இதேவேளை குறித்த பாரதி சிறுவர் இல்லத்தில் வசிக்கமுடியாத நிலையில் 6 சிறுமிகள் இல்லத்தினை விட்டு தப்பி ஓடியுள்ளார்கள் குறித்த சிறவர் இல்லத்தில் வாழமுடியாத நிலையில் இவர்கள் இவ்வாறு இல்லத்தினை விட்டு வெளியேறியுள்ளார்கள் என்றால் இதற்கு யார் காரணம்.
இந்த பாரதி சிறுவர் இல்லத்திற்கு கே.பி எனப்படும் நபரும் நிகழ்வுகளுக்கு வந்து செல்வது வழமை இவ்வாறான நிலையில் இந்தசிறுவர் இல்லத்தினை அசரஅதிகாரிகள் சரியாக கண்காணிக்கமுடியாத நிலையே இதற்கு காரணமாக அமைந்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இவ்வாறு சிறுவர்கள் வாழமுடியாத நிலையில் காணப்படும் சிறவர் இல்லங்கள் தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுப்பார்களா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
சிறுமிகளின் நிலை மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமிகள் குறித்தான விசாரணையினை முள்ளியவளை பொலீசார் மேற்கொண்டுவருகின்றார்கள்.
குறிப்பு-. குறித்த சிறுவர் இல்லமானது கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனின் மேற்பார்வையில் இருப்பதுடன் கே.பி கோத்தாபாய அரசாங்கத்துடன் ஒத்தோடுவதும் குறிப்பிடத்தக்கது