யாழ்ப்பாணம்- சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் கண்களில் பாதிப்புக்களை எதிர்கொண்ட நிலையில், வைத்திய சாலைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
சாவகச்சேரி, கைதடி பகுதியில் உள்ள சனசமூக நிலையம் ஒன்றில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியிலேயே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.
இந்த இசை நிகழ்சியில் லேசர் கதிரொளிகள், புகைகள் (ஸ்மோக்) போன்றவை அளவுக்கு அதிகமாக பாவிக்கப்பட்டமையாலையே நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கண் எரிவு, கண் வீக்கம், தொடர்ச்சியாக கண்ணீர் வருதல் போன்ற பாதிப்புக்களுக்கு உள்ளவர்கள், தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கைந்து பேர் உள்ளிட்ட சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறு கண்களில் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.