முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் செப்ரெம்பர் (06) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
அகழ்வுப் பணிகளில் மனித உடல்களின் மனித எச்சங்கள் பகுதியளவில் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில்
கடந்த (08) ம் திகதி அங்கு செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளரின் கடமைக்கு சிங்கள பொலிஸார் இடையூறு ஏற்படுத்தியதுடன், குறித்த ஊடகவியலாளர்களை சிறீலங்கா காவற்துறையினர் அச்சுறுத்தியுள்ளனர் இந்நிலையில் நீதி மறுக்கப்பட்டுள்ள கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி சம்பவ யாடத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் இன்று சம்பவ இடத்தில் பார்வையிட்டனர்
இதேவேளை
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வை நேரடியாக காணொளிப்பதிவு செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
உள்ளக விசாரணை நம்பிக்கை தராது சர்வதேச விசாரணை வேண்டும் எனவும் கயேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.