முல்லைத்தீவு கொக்குத் தொடுவாய் மனிதப் புதை குழியில் இருந்து இன்று முக்கிய தடையப் பொருளாக போராளிகளின் இலக்கத் தகடு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கண்டு பிடிக்கப்பட்ட இலக்கத் தகடு -த.வி.பு [ இல -1333 ] என்ற எண் இலக்கத்தை கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இரண்டு போராளிகளின் முழுமையான உடலங்களின் எச்சங்களும் இன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் மேலும் முக்கிய பல தடயங்களும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ள நிலையில் இன்றைய அகழ்வுப் பணிகள் குறித்த விடயங்கள் ஊடகவியலாளர் களுக்குத் தெரிவிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் இன்றைய [ நான்காம் ] நாள் அகழ்வுப் பணியுடன் நான்கு மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
முன்பு கண்டு பிடிக்கப்பட்டவை இரண்டும் பெண் போராளிகளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று கண்டு பிடிக்கப்பட்ட மற்றைய இரண்டு மனித எச்சங்கள் குறித்த விபரங்கள் வெளிப்படுத்தப்பட வில்லை.
அதேநேரம் இவை இறுதிப்போரின் போது சிறிலங்கா படைகளிடம் உறவுகளால் கையளிக்கப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட போராளிகளுடையது எனத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.