மட்டக்களப்பு – கொக்குவில் பனிச்சையடி பகுதியில் உள்ள வெற்றுக் காணியிலுள்ள கிணறு ஒன்றில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று மாலை மீட்டகப்பட்டுள்ளதாக கொக்குவில் சிறீலங்கா காவல்த்துறையினர் தெரிவித்தனர்.
பனிச்சையடி பண்ணை வீதியிலுள்ள வெற்றுக்காணி ஒன்றின் கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசிய நிலையில் பொதுமக்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவதினமான இன்று மாலை 4 மணியளவில் குறித்த கிணற்றில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலத்தை மீட்டுள்ளனர்.
குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன் நீதிமன்ற அனுமதியை பெற்று சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக சிறீலங்கா காவல்த்துறையினர் தெரிவித்தனர்.