நோர்வேயில் மிக வேகமாக பரவும் கொரோனா வைரஸ் தொற்றுக்காரணமாக நேற்று முதல் பல்கலைக்கழகங்கள் பாடசாலைகள் மழலையர் பூங்காவுகள் உல்லாசத்துறைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதை தொடர்ந்து தமக்கு கிடைத்த விடுமுறையையும் பரீட்சை எழுதத்தேவையில்லை என்ற மகிழ்ச்சியையும் வெளிப்படுத்துவதற்காக நேற்றைய நாள் நோர்வே மாணவர்கள் ஒஸ்லோவில் மதுபானக்கொண்டங்களை நடத்தியதாகவும் சனி ஞாயிறு நாட்களில் இன்னும் பல கொண்டாட்டங்களை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் நோர்வே காவல்த்துறையினர் கவலைவெளியிட்டுள்ளனர்.
அதேவேளை
இப்படியான கொண்டாட்டங்களில் ஈடுபடவேண்டாம் எனவும் இதனால் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் நோர்வே சுகாதாரத்துறையினரும் காவல்த்துறையினரும் எச்சரித்துள்ளதுள்ளனர்.
இதேவேளை இப்போதுவரை நோர்வேயில் 994 பேருக்கு தொற்றியுள்ளதுடன் ஒருவர் மரணமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.