கொரோனாவால் உலகம் எதிர்கொள்ளும் மரணங்கள்!

You are currently viewing கொரோனாவால் உலகம் எதிர்கொள்ளும் மரணங்கள்!

  • உலக சுகாதார நிறுவனத்தால் திங்கட்கிழமை தொகுக்கப்பட்ட தகவல்களின்படி இதுவரை கொரோனாவால் 6606 பேர் பலியாகி உள்ளனர். 167,511 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது.
  • 151 நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவி உள்ளது.

உலக அளவில் வெவ்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை என்ன?

நாடுபாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கைஉயிரிழந்தோர் எண்ணிக்கை
சீனா81,0513230
இத்தாலி27,9802158
இரான்14,991853
ஸ்பெயின்9,942342
தென் கொரியா8,32075
ஜெர்மனி7,27217
பிரான்ஸ்6,650148
அமெரிக்கா4,66185
சுவிட்சர்லாந்து2,33019
பிரிட்டன்1,55356
  • கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த ஐரோப்பாவில் உள்ள நாடுகள் பல முயற்சிகளை எடுத்துவரும் நிலையில், சமூக ரீதியிலான தொடர்புகளைக் கட்டுப்படுத்தும் விதமாக ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் சில புதிய நடவடிக்கைகளை அமல்படுத்துள்ளன.
கொரோனா தடுப்பூசி பரிசோதனை: பலன் தருமா? - சில தகவல்கள் Live Updates

சர்வதேச நிலை

  • ஸ்பெயின் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் கொரோனா பரவலுக்கு எதிராக அவசர நிலையை அறிவித்து, அங்கு அலுவலகங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்டவை அரசின் உத்தரவுப்படி கட்டாயமாக மூடப்பட்டுள்ளது போல பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங்கும் அவ்வாறான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
  • ”சுகாதார ரீதியிலான ஒரு போரில் தற்போது நாம் உள்ளோம்” என்று மக்ரோங் தெரிவித்துள்ளார்.ஐரோப்பிய ஒன்றியத்துடனான பிரான்ஸின் எல்லைகள் வரும் செவ்வாய்க்கிழமை முதல் மூடப்படும் என்றும் இமானுவேல் மக்ரோங் மேலும் குறிப்பிட்டார்.
  • ஜெர்மனியில் மளிகைக்கடைகள் அல்லாத பிற கடைகள் மற்றும் நிறுவனங்கள் மூடப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
  • ஜெர்மனியில் மத ரீதியிலான நிகழ்வுகளுக்குத் தற்காலிகமாகத் தடை விதித்துள்ள அந்நாட்டின் சான்சிலர் ஏங்கெலா மெர்கல், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலா பயணங்களை ரத்து செய்யுமாறு மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
கொரோனா தடுப்பூசி பரிசோதனை: பலன் தருமா? - சில தகவல்கள் Live Updates
  • ஜெர்மனி முழுவதிலும் பள்ளிகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • இதனிடையே, பிரிட்டனில் கட்டாய தடைகள் எதனையும் பிரதமர் போரீஸ் ஜான்சன் அறிவிக்காத போதும், மதுபான கூடங்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று மக்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார். தேவையற்ற பயணங்களை மக்கள் தவிர்ப்பது நல்லது என்றும் அவர் கூறியுள்ளார்.
கொரோனா தடுப்பூசி பரிசோதனை பலன் தருமா? - உலக நிலவரம் என்ன? - Live Updates
  • இந்தியாவில் தாஜ்மஹால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சராசரியாக தினமும் 70000 பேர் தாஜ்மஹாலை பார்வையிடுகிறார்கள்.

கண்களைக் கட்டிக்கொண்டு நீங்கள் தீயினை அணைக்க முடியாது

  • முன்னதாக கொரோனா தொற்று பரவல் குறித்து கவலை தெரிவித்த உலக சுகாதார நிறுவனத்தின் தலைவரான டெட்ரோஸ் அதனோம் கிப்ரயெசூஸ், உலக அளவில் பல அரசுகளும் இந்த தொற்றை கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.
கொரோனா தடுப்பூசி பரிசோதனை: பலன் தருமா? - சில தகவல்கள் Live Updates
  • மேலும் அரசுகள் கொரோனா தொற்று சோதனை நடவடிக்கைகளை மேலும் துரிதப்படுத்த வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
  • ”கண்களைக் கட்டிக்கொண்டு நீங்கள் தீயினை அணைக்க முடியாது. எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் என்று முழுவதுமாக அறியாமல் இந்த தொற்று பரவலை நாம் முடிவுக்குக் கொண்டு வர முடியாது” என்று ஜெனீவாவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார். ”அனைத்து நாடுகளுக்கும் ஒரு செய்தியைத்தான் நாங்கள் சொல்கிறோம். சோதனை செய்யுங்கள்! சோதனை செய்யுங்கள்! என்பதுதான் அது” என்றார் அவர்.
பகிர்ந்துகொள்ள