கொரோனாவினால் உலகமெங்கும் 2 கோடிபேர் வேலையிழப்பு!

You are currently viewing கொரோனாவினால் உலகமெங்கும் 2 கோடிபேர் வேலையிழப்பு!

கொரோனா வைரஸ் காரணமாக உலகெங்கும் தொழிலாளர்கள் ஒட்டுமொத்தமாக பணியிழக்க நேரிடும் என்று ஐ.நா. சபை சர்வதேச தொழிலாளர் அமைப்பின் இயக்குனர் கய் ரைடர்எச்சரித்துள்ளார்.உலகம் முழுவதும் சுமார் 20 கோடி முழுநேர பணியாளர்கள் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான இரண்டாம் காலாண்டில் வேலையிழக்க நேரிடும், ஐரோப்பா மற்றும் அரபு நாடுகளிலும் இதன் தாக்கம் இருந்தாலும், மக்கள் தொகை அதிகமுள்ள ஆசிய பசிபிக் பிராந்தியத்திலேயே அதிக பாதிப்பு உணரப்படும்.

உற்பத்தி சார்ந்த சில்லறை மற்றும் மொத்த வர்த்தகம், உணவகங்கள், தங்குமிடங்கள், சுற்றுலா, மற்றும் சேவை துறை நிறுவனங்கள் இழப்பை சந்திக்க நேரிடும். ஏற்கனவே, இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 3 முதல் 4 கோடி பேர் வேலையிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.இது, நிச்சயமாக நம்மில் எவரும் நமது வாழ்நாளில் கண்டிராத, கேள்விப்படாத மிகக் கடுமையான வேலைவாய்ப்பு நெருக்கடியாக இருக்கும் என்றே ஐ.எல்.ஓ. சொல்கிறது.

இப்போது, ​​இது எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது தான் மிகப்பெரிய கேள்வி, ஆனால் அனைத்திலும் மிகப்பெரிய நிச்சயமற்ற தன்மை உள்ளது என்பதே நிதர்சனம்.முதலாவதாக, இந்த தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் நாம் எவ்வளவு வெற்றிகரமாக இருப்போம்?எவ்வளவு சீக்கிரம் நாம் இதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகிறோமோ அவ்வளவு சீக்கிரம் நாம் வீட்டிற்குள் முடங்காமல் வெளியில் வரமுடியும். இருந்தபோதும், அது பொருளாதார மற்றும் சமூக கண்ணோட்டத்தில் எடுக்கப்படும் கொள்கை நிலைப்பாடுகளை பொருத்தும் உள்ளது.பொருளாதாரத்தை சீர்செய்ய தேவையான பணத்தை உலக நாடுகளின் அரசுகள் செலவிட தயாராக இருக்கவேண்டும்.

தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களின் சுமூக உறவையும் வேலைவாய்ப்பையும் தொடர பணத்தை முதலீடு செய்ய முன்வரவேண்டும்.ஆனால் இந்த நிலைமை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது உண்மையில் சுகாதாரக் கொள்கையில் நாம் எவ்வளவு சிறப்பாக செயற்படப்போகிறோம் என்பதையும் நாம் அனைவரும் எவ்வாறு ஒன்றிணைந்து செயற்படப்போகிறோம் என்பதையும் பொறுத்தது என்று சீன செய்தி நிறுவனம் ஒன்றுக்கு இன்று அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

பகிர்ந்துகொள்ள