எரிமலை வெடிப்புகள் : இந்தோனேசியாவில் மீண்டும் எரிமலை வெடித்தது!

  • Post author:
You are currently viewing எரிமலை வெடிப்புகள் : இந்தோனேசியாவில் மீண்டும்  எரிமலை வெடித்தது!

இந்தோனேசியாவில் உள்ள எரிமலை அனக் கிரகடாவ் (Anak Krakatau) அதன் சாம்பலை 500 மீட்டர் உயரம்வரை காற்றில் கக்கியுள்ளது. இது, 2018 ல் சுனாமிக்கு காரணமாயிடுந்த மிகப்பெரிய வெடிப்புக்குப் பின்னரான மிகப்பெரிய எரிமலை வெடிப்பாகும்.

இந்தோனேசியாவின் எரிமலை மற்றும் புவியியல் பேரழிவு தணிப்பு மையத்தின் கண்காணிப்பு ஒளிப்படக்கருவிகளில் வெள்ளி இரவு எரிமலையிலிருந்து எரிமலைக்குழம்பு எவ்வாறு வெளியேறுகிறது என்பதைக் காட்டியுள்ளது . இந்த வெடிப்பானது இன்று சனி காலை வரை தொடர்ந்ததாக அறியமுடிகின்றது.

2018 ஆம் ஆண்டில் இதுபோன்ற ஒரு எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட சுனாமியில், சுமத்ரா மற்றும் ஜாவா கடற்கரைகளில் 430 பேர் இறந்தது இங்கு குறிப்பிடத்தக்கது . (NTB)

மேலதிக தகவல்: VG

பகிர்ந்துகொள்ள