கொரோனா சிகிச்சையில் உதவி செய்வதற்காக இத்தாலி சென்ற கியூபா மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சொந்த நாடு திரும்பினர்.
இத்தாலியில் தொற்று பரவல் அதிகமாக இருந்ததால் அதனை கட்டுப்படுத்தும் விதத்தில் கடந்த மார்ச் மாதம் 36 மருத்துவர்களையும், 15 செவிலியர்களையும் கியூபா அனுப்பி வைத்தது.
தற்போது இத்தாலியில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கிய நிலையில் பணி முடித்து அவர்கள் அனைவரும் விமானம் மூலம் ஹவானா திரும்பினர்.
கியூபாவில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் அதில் அனுபவம் வாய்ந்த 12 மருத்துவக் குழுக்கள் உலகின் பல நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.