இன்று திங்களன்று, 1 முதல் 4 ஆம் வகுப்பு வரையிலான சுமார் 250,000 மாணவர்களுக்கான பள்ளிகள் தொடங்கியபோது, ஒஸ்லோவில் ஐந்தில் ஒரு 1 ம் வகுப்பு மாணவர்கள் வீட்டிலேயே தங்கியுள்ளனர்.
ஆறு வார வீட்டுக்கல்விக்குப் பின்னர், தொடக்கப்பள்ளிகள் மாணவர்களுக்கான பள்ளியின் முதல் நாளுக்கு தயாராக இருந்தன. ஆனால், பல பெற்றோர்கள் தொற்று குறித்த சந்தேகம் காரணமாக பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை.
ஒஸ்லோவில், 108 தொடக்கப் பள்ளிகளில் 59 பள்ளிகள் இன்றைய வருகையைப் பதிவு செய்துள்ளன. அங்கு, பெரும்பான்மையான மாணவர்கள் வருகை தந்துள்ளனர்.
ஆனால் ஒஸ்லோவில், முதலாம் வகுப்பு மாணவர்களில் ஐந்தில் ஒருவர் இன்று பள்ளிகளுக்கு சமூகமளிக்கவில்லை என்று நகராட்சியின் ஆரம்ப புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2 – 4 ஆம் வகுப்பு மாணவர்களில், 82 முதல் 85 விழுக்காடு மாணவர்கள் பள்ளிக்குச் சமூகமளித்துள்ளனர்.
பலர் தங்கள் குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு அனுப்புவதற்கு முன்னர், கொரோன தொற்றின் பின்னரான இந்த பள்ளிகள் எவ்வாறு செல்கின்றன என்று காத்திருந்து பார்க்க விரும்புகின்றார்கள் என்று ஒஸ்லோ பள்ளி நகரசபை Inga Marte Thorkildsen (SV) கூறியுள்ளார்.
மேலதிக தகவல் : NRK