Trondheim நகராட்சி, திங்களன்று மழலையர் பள்ளிகள் திறக்கும்போது, தொற்று ஆபத்து குழுவில் (Risikogruppe) உள்ள குழந்தைகள் ஒரு மருத்துவரிடம் சென்று மழலையர் பள்ளிக்குச் செல்ல முடியுமா என்பதை தெளிவுபடுத்த வேண்டியது சிறந்தது என்று தாங்கள் நம்புவதாக செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியுள்ளது.

இது, தொற்று ஆபத்து குழுக்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும், மற்றும் பெற்றோர்களுக்கும் பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.
உங்களுக்கு சுவாச நோயின் அறிகுறிகள் இருந்தால் நீங்கள் மழலையர் பள்ளிக்கு செல்லக்கூடாது என்பதையும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலதிக தகவல் : Dagbladet