திருட்டுப்பிரதி முகமூடியைப் பயன்படுத்துவதால் தான் தொற்று ஏற்பட்டதா என்பது நிச்சயமற்றது. ஆனால், மருத்துவமனை அதை சாத்தியமானதாகவே கருதுகின்றது. இது மிகவும் வருந்தத்தக்கது என்று UNN நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி “Anita Schumacher” கூறியுள்ளார்.
திருட்டுப்பிரதி பாதுகாப்பு முகமூடியைப் பயன்படுத்திய UNN ஊழியர் ஒருவருக்கு சோதனை மூலம் கோவிட் -19 தொற்று இருப்பது தெரியவந்தது. Tromsø மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் இவர் பணிபுரிகின்றார் என்று மருத்துவமனை ஒரு செய்திக்குறிப்பில் மேலும் கூறியுள்ளது.
சீனாவில் இருந்து வந்ததாக சந்தேகிக்கப்படும் திருட்டுப்பிரதி பாதுகாப்பு முகமூடிகளைப் பயன்படுத்திய 150-200 ஊழியர்களை சோதிக்க வேண்டும் என்று VG கடந்த வாரம் எழுதியது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த முகமூடிகள் Svalbardடில் உள்ள ஒரு பெரிய Norske gruvedrift நிறுவனத்தின் ஒரு பரிசாக இருந்துள்ளன, மேலும் சில உபகரணங்களில் உற்பத்தி குறைபாடுகள் இருப்பதை அவர்கள் ஏற்கனவே கண்டுபிடித்தனர் என்றும், கடந்த வெள்ளி அன்று , 700 முகமூடிகள் தவறுதலாக வழங்கப்பட்டுள்ளதாகவும், UNN இன் சொத்து மேலாளர் Grethe Andresen கூறியுள்ளார்.
மேலதிக தகவல்: VG