கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இத்தாலி ஒன்றாகும். இத்தாலியில் வைரஸின் விளைவாக 18,849 பேர் இறந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, மேலும் கிட்டத்தட்ட 150,000 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் நாடு பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த நிலையில், பணமில்லாமல் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு MAFIA இலவச உணவை விநியோகிக்கத் தொடங்கியுள்ளது. இது மாஃபியா எதிர்ப்பு புலன்விசாரணையாளர் Nicola Gratteri வை கவலையடையச் செய்துள்ளது.
நாட்டின் உள்துறை மந்திரி Luciana Lamorgese மாஃபியாவின் செயல்பாடுகள் குறித்து கவலை தெரிவித்துள்ளார்.
“மாஃபியா தனது அமைப்பிற்கு மக்களைச் சேர்ப்பதன் மூலம் அதிகரித்து வரும் வறுமையை சுரண்ட முடியும்” என்று உள்துறை அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.