கொரோனா இந்தியா : ஒரே நாளில் 2154 பேருக்கு பாதிப்பு!

  • Post author:
You are currently viewing கொரோனா இந்தியா : ஒரே நாளில் 2154 பேருக்கு பாதிப்பு!

இந்தியாவில் ஒரே நாளில் 2154 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, பாதிப்பு எண்ணிக்கை 16,365 ஆக அதிகரித்துள்ளது.

அதிகளவாக, மகாராஷ்ராவில் 3,323 பேர் கொரேனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் ஏப்ரல் 18 இரவு 9 மணி நிலவரப்படி கொரோனாவால் புதிததாக 2154 பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி அமைப்பு கூறியுள்ளது.

அதிகளவாக மகாராஷ்ராவில் 3,323 பேரும், டெல்லியில் 1707 பேரும், தமிழகத்தில் 1372 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய பிரதேசத்தில் 1355 பேருக்கும், ராஜஸ்தானில் 1,229 பேருக்கும், குஜராத்தில் 1,272 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,365 ஆகவும், உயிரிழப்பு 521 ஆகவும் அதிகரித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள