கொரோனா இந்தியா : டெல்லியில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2918 ஆக உயர்வு!

  • Post author:
You are currently viewing கொரோனா இந்தியா : டெல்லியில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2918 ஆக உயர்வு!

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 26,917 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,975 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து 5,914 பேர் மீண்டுள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 826 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மூன்றாவது இடத்தில் தலைநகர் டெல்லி உள்ளது.

இந்நிலையில் டெல்லியில் புதிதாக 293 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அங்கு 2,918 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அங்கு பலியானோர் எண்ணிக்கை 54 ஆக உள்ளது.

பகிர்ந்துகொள்ள