இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்திய மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட புள்ளிவிவரத்தில், இந்த வைரஸ் தொற்றால் இந்தியாவில் 14,378 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என குறிப்பிட்டுள்ளது. கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கையும் 480 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கொரோனா பாதிப்பு பற்றி மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை 507 ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை 2,230 பேர் குணமடைந்து உள்ளனர். 12,974 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர் என தெரிவித்து உள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15,712 ஆக உயர்வடைந்து உள்ளது.