கொரோனா நோய்த்தொற்றின் அபாயத்தைக் குறைக்க கடந்த இரண்டு வாரங்களில், 194 கைதிகள் நோர்வே சிறைகளில் இருந்து முன்கூட்டியே விடுவிக்கப்பட்டதாக குற்றவியல் சேவைகள் மையம் (KDI) தெரிவித்துள்ளது.
மார்ச் 16 திங்கள் அன்று, குற்றவியல் சேவைகள் மையம், சிறைக் கைதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க முடிவு செய்தது. கைதிகள் மற்றும் ஊழியர்களுக்கிடையே நோய்த் தொற்று ஏற்படுவதைக் குறைப்பதும், அனைத்து கைதிகளினதும் தண்டனைகளை விரைவாக நிறைவேற்றுவதை உறுதி செய்வதுமே இதன் நோக்கமாகும்.
முன்கூட்டியே விடுதலை செய்தல் என்பது, தண்டனை பெற்ற நபர்க ள் தண்டனை காலத்திற்கு முன்பே விடுவிக்கப்படுவதாகும். முன்கூட்டிய விடுதலையில், தண்டனை காலத்தைப் பொறுத்து 10, 20 அல்லது 30 நாட்களுக்கு முன்னதாக கைதிகள் விடுதலை செய்யப்படுவர் .
மேலதிக தகவல் : VG