NAV திங்களன்று, 5800 வேலையின்மை ஊதியத்துக்கான புதிய விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது. மொத்தத்தில், இந்த ஆண்டு 400,000 க்கும் மேற்பட்டோர் வேலையின்மை ஊதியத்துக்காக விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திங்களன்று வந்த விண்ணப்பங்களில், 1100 விண்ணப்பங்கள் சாதாரண வேலையின்மை ஊதியத்துக்கான விண்ணப்பங்கள் என்றும் , 4700 தற்காலிக பணிநீக்க வேலையின்மை ஊதியத்துக்கான விண்ணப்பங்கள் (dagpenger ved permittering) என்றும் கூறப்பட்டுள்ளது.
மார்ச் 12, வியாழக்கிழமை முதல், வேலையின்மை ஊதியத்துக்காக மொத்தம் 361,500 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன, அவற்றில் 324,100 பணிநீக்கம் செய்யப்பட்டவுடன் வேலையின்மை ஊதியத்துக்காக விண்ணப்பங்கள் என்றும், இது சுமார் 90 விழுக்காடு தொகையாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டில் இதுவரை வேலையின்மை ஊதியத்துக்காக மொத்தம் 400,500 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக NAV இன்று செவ்வாய் தெரிவித்துள்ளது. (NTB)
மேலதிக தகவல்: VG