உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 லட்சத்தை கடந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,64,246 ஆக அதிகரித்துள்ளது.
ஸ்பெயினில் பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 96 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில், இத்தாலியில் பாதிப்பு 1 லட்சத்து 78 ஆயிரத்தை கடந்துள்ளது.
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 7 லட்சத்து 60 ஆயிரத்தை நெருங்கியுள்ளதுடன், உயிரிழப்பு 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நியூயார்க்கில் கடந்த 24 மணி நேரத்தில் 540 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 வாரங்களின் இறப்பு விகிதத்தை ஒப்பிடும் போது, உயிரிழப்பு குறையத் தொடங்கி விட்டதாகத் தெரிகிறது.
ஸ்பெயினில் கடந்த ஒரு மாதத்தில் இல்லாத வகையில் உயிரிழப்பு விழுக்காடு குறைந்துள்ளது. ஸ்பெயினில் பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 96 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில், இத்தாலியில் பாதிப்பு 1 லட்சத்து 78 ஆயிரத்தை கடந்துள்ளது.
இவ்விரு நாடுகளிலும் உயிரிழப்பு தலா 20 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், தற்போது பிரான்சிலும் உயிரிழப்பு 20 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
ஜெர்மனியில் பாதிப்பு 1 லட்சத்து 44 ஆயிரத்தை கடந்துள்ளது.
உலக அளவில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,64,246 ஆக அதிகரித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் மட்டும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது.