பாரிஸ் நகரில் தண்ணீரில் கொரோனா வைரஸ் அறிகுறி!

You are currently viewing பாரிஸ் நகரில்  தண்ணீரில் கொரோனா வைரஸ் அறிகுறி!

பாரிஸ் நகரில் வீதிகளைக் கழுவுதல் போன்ற சுத்திகரிப்புத் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் தண்ணீரில் கொரோனா வைரஸ் தொற்றின் தடயங்கள் மிகச் சிறிய அளவில் தென்பட்டுள்ளன.

இதனையடுத்து உடனடியாக இந்த சுத்திகரிப்பு நீர் விநியோக சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன என்று நகரசபை நிர்வாகம் ஏ. எவ். பி செய்திச் சேவைக்குத் தெரிவித்திருக்கிறது.

ஆனால் வீடுகளுக்கு வநியோகிக்கப்படும் குழாய் நீரில் எந்தவித தொற்றும் கிடையாது என்றும், அது பாவனைக்கு உகந்த நிலையில் இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாககவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நகர சபையின் நீர் விநியோக நிர்வா கத்துக்கு உட்பட்ட ஆய்வு கூடங்களில் நடத்தப்பட்ட பரிசோதனைகளில் இருந்து இது தெரியவந்துள்ளது. சுத்திகரிப்புத் தேவைகளுக்கு வழங்கப்படும் நீரின் மாதிரிகள் 27 இடங்களில் இருந்து சேகரிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதில் நான்கு இடங்களில் பெறப்பட்ட மாதிரிகளில் லேசான தொற்று இருப்பது அவதானிக்கப்பட்டிருக்கிறது.

பாரிஸ் நகரில் பொதுமக்களுக்கான குடி தண்ணீர் சேவையும் வீதிகளைக்கழுவுதல், பூங்காக்களுக்கான நீர்ப்பாசனம் போன்ற பிற தேவைகளுக்குரிய தண்ணீர் வழங்கலும் தனித்தனியான இருவேறு விநியோக வலையமைப்புகள் ஊடாகவே நடைபெற்றுவருகின்றன. இது 19 ஆம் நூற்றாண்டுகளில் இருந்து நடைமுறையில் உள்ளது.

சுத்திகரிப்பு மற்றும் பூங்காக்களுக்குத் தேவையான நீர் சென் நதி(Seine) , ourcq கால்வாய் ஆகியவற்றில் இருந்து பெறப்பட்டு தொற்று நீக்கப்பட்ட பின்னர் பயன்படுத்தப்படுகிறது.

19-04-2020

(நன்றி குமாரதாஸன்)

பகிர்ந்துகொள்ள