உலகின் பணக்காரர்களில் சிலருக்கு “தனிமைப்படுத்தல் ” என்பது வெளிநாடுகளில் கொரோனா சோதனை, தனியார் மருத்துவர்கள், தனிப்பட்ட மருந்து வகைகள் மற்றும் நிலத்தடி மறைவிடங்கள் போன்றவையே!
உலகெங்கிலும் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்களைப் போலவே, மிகப்பெரிய செல்வந்தர்களும் கொரோனா வைரஸ் நெருக்கடியை எதிர்கொள்ளும் போது தங்களை தனிமைப்படுத்த தயாராகி வருகின்றனர்.
அமெரிக்காவில் உள்ள பணக்காரர்கள், சராசரி அமெரிக்கரை விட, மாற்று வழிகளையே நாடுகின்றனர். தனியார் விமானங்களில், உலக முன்னணி நிபுணர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது மற்றும் ஆடம்பரமான மருத்துவ சிகிச்சையை அணுகுவதன் மூலம் தொற்றுநோய்க்குத் தயாராகி வருகின்றனர்.
“The Guardian” கருத்துப்படி, உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள், தொலைதூர விடுமுறை இல்லங்களுக்குச் செல்ல தனியார் விமானங்களைப் பயன்படுத்துகின்றார்கள், அல்லது இதுவரை மோசமாக கொரோனா தோற்றால் பாதிக்கப்படாத இடத்தில் பிரத்தியோகமாக கட்டமைக்கப்பட்ட பாதுகாப்பு பதுங்கு குழிகளைப் பயன்படுத்துகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
பல பணக்காரர்கள் அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் சிகிச்சையளிக்க தனிப்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களையும் பயணங்களில் அவர்களுடன் அழைத்து செல்கின்றார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலதிக விபரம்: The Guardian