கொரோனா வைரஸின் விளைவாக 12 வயது சிறுமி இறந்துவிட்டதாக பெல்ஜிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பெல்ஜியத்தில் கொரோனா வைரஸால் இறந்த 700 க்கும் மேற்பட்டவர்களில் வயது குறைந்தவர் இவராவார்.
தேசிய அவசர சேவை செய்தித் தொடர்பாளர் Emmanuel Andréகூறுகையில், இறப்பு எண்ணிக்கையை சமாளிப்பது கடினமாகவுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
இது ஒரு குழந்தை என்பதால், உணர்ச்சி ரீதியாக மிகவும் கவலையானது என்றும், மேலும் இது மருத்துவ மற்றும் விஞ்ஞான சமூகத்தை மிகவும் வருத்தப்படுத்தியுள்ளது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் பெல்ஜியத்தில் கொரோனா வைரஸின் விளைவாக 98 பேர் இறந்துள்ளனர், இப்பொழுது மொத்த இறப்பு எண்ணிக்கை 705 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 12,705 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.