மிக வேகமாக பரவிவரும் பிறழ்வடைந்த “கொரோனா” வைரஸை கட்டுப்படுத்துவதற்காக மிக இறுக்கமான கட்டுப்பாடுகளை நோர்வே அரசு இன்று அறிவித்துள்ளது.
- வீடுகளுக்கு வெளியே அதிகபட்சமாக 5 பேருக்கு மேல் கூடுவது தவிர்க்கப்பட வேண்டும் (ஒரே வீட்டில் வசிக்கும் அதே குடும்பத்தில் 5 பேருக்கு மேல் இருந்தால் இது பொருந்தாது)…
- உள்ளக அரங்குகளில் நடைபெறும் விளையாட்டு நிகழ்வுகள், கலாச்சார நிகழ்வுகள் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளிலும் அதிக பட்சமாக 10 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுத்தல்…
- நிரந்தரமாக பொருத்தப்பட்ட இருக்கைகள் உள்ள மண்டபங்களில் 200 பேருக்கு மட்டுமே அனுமதி…
- மரணச்சடங்குகளில் 50 பேருக்கு மட்டுமே அனுமதி…
- நாடு முழுவதிலுமுள்ள மதுபானச்சாலைகளிலும், நிகழ்வுகளிலும் மதுபான விற்பனை / வழங்கல் தவிர்க்கப்படல்…
- ஆகக்குறைந்தது 14 நாட்களுக்கு வீடுகளில் விருந்தினர்களை தவிர்ப்பது…
- உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணங்களை தவிர்ப்பதோடு, மலைவாசத்தலங்களுக்கு செல்வதும் தவிர்க்கப்படல்…
- பல்பொருள் அங்காடித்தொகுதிகளில் (Shopping Centre) ஒரே நேரத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்களை மட்டுமே அனுமதிக்கும் ஒழுங்குகள் செய்யப்படுதல்…
- நாடளாவிய ரீதியில் அனைத்து இளநிலை மற்றும் மேனிலைப்பள்ளிகள் “சிவப்பு” அபாய நிலையில் வைத்திருத்தல்…
- பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிலையங்களின் கற்பித்தல் நடவடிக்கைகள் யாவும் இலத்திரனியல் மயமாக்கப்படுத்தல்…
- அலுவலக பணியாளர்கள் அனைவருக்கும் முடிந்தளவு வீடுகளில் இருந்தபடியே பணியாற்றுவதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தல்…
- பொது இடங்களில் கட்டாய முகக்கவசம் மற்றும் குறைந்தது ஒரு மீட்டர் இடைவெளி பேணப்படுதல்…
- உடற்பயிற்சி நிலையங்கள், நீச்சல் நிலையங்கள் போன்றவை முற்றாக மூடப்படுத்தல்…
போன்ற விடயங்கள் 04.01.2021 முதல் 18.01.2021 வரை அமுலில் இருக்குமென பிரதமர் “Erna Solberg” அம்மையார் அறிவித்துள்ளார்.