“கொரோனா” தடுப்பு மருந்தை விரைந்து அங்கீகரிக்கும் ஐரோப்பா!

You are currently viewing “கொரோனா” தடுப்பு மருந்தை விரைந்து அங்கீகரிக்கும் ஐரோப்பா!

சந்தைக்கு வரவிருக்கும் “கொரோனா” தடுப்பு மருந்துகளை அங்கீகரிக்கும் பணிகளை ஐரோப்பா துரிதப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ஐரோப்பிய மருந்து நிறுவனம் / EMA” இந்த முயற்சிகளில் துரிதமாக பணியாற்றி வருவதாகவும், நிர்ணயிக்கப்பட்ட 23.12.2020 கால எல்லைக்குள் தடுப்பு மருந்துகள் அங்கீகரிக்கப்படும் பட்சத்தில் 24.12.2020 அன்று முதலாவது தடுப்பு மருந்தை நோர்வேயில் பாவனையில் எடுக்கக்கூடியதாக இருக்குமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனமான “Biontech” நிறுவனம், ஐரோப்பாவெங்கும் தடுப்பு மருத்துகளை விநியோகிப்பதற்கான தயார் நிலையில் இருப்பதாக ஜேர்மனிய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கான முதல் தொகுதி தடுப்பு மருந்துகளை ஏற்கெனவே தயாரித்து களஞ்சியப்படுத்தி வைத்திருப்பதாக தெரிவித்திருக்கும் “Biontech” நிறுவனம், ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து அனுமதி கிடைத்ததும் உடனடியாக தடுப்பு மருந்து விநியோகத்தை தம்மால் ஆரம்பிக்க முடியுமென மேலும் தெரிவித்துள்ளது.

தடுப்பு மருந்துகள் அங்கீகரிக்கப்படும் பட்சத்தில், “Biontech மற்றும் “Pfizer” நிறுவனங்களின் 500.000 தடுப்பு மருந்துகள் நோர்வேக்கு முதற்கட்டமாக, மார்ச் 2021 காலப்பகுதிக்குள் கிடைக்குமெனவும், இம்மருந்துகளை பயனாளிகளுக்கு கொடுப்பதற்கான அத்தியாவசிய உபகரணங்கள் அனைத்தும் தேவையான இடங்களுக்கு அனுப்பப்பட்டு தயார் நிலையில் அனைத்தும் வைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

ஐரோப்பிய ஒன்றியம் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள ஒரேயொரு குறிப்பிட்ட மருந்து நிறுவனத்திடமிருந்து சுமார் 2.5 மில்லியன் தடுப்பு மருந்துகளை வாங்குவதற்கு நோர்வே திட்டமிட்டுள்ளதாகவும், கட்டம் கட்டமாக வரக்கூடிய இத்தடுப்பு மருந்துகள், முன்னுரிமை தேவைப்படுபவர்கள் என்கிற அடிப்படையில் பயனாளிகள் வகைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு வழங்கப்படுமெனவும் நோர்வே தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள