கொரோனா தளர்வு : சுதந்திர காற்றை சுவாசிக்கும் வுகான் மக்கள்!

  • Post author:
You are currently viewing கொரோனா தளர்வு : சுதந்திர காற்றை சுவாசிக்கும் வுகான் மக்கள்!

100 அதிவேக தொடரூந்துகள், 200 விமானங்கள் தயார் நிலையில்!, கொரோனாவின் பிறப்பிடமான வுகான் (Wuhan) மக்கள் சுதந்திர காற்றை சுவாசிக்கத் தயார்!

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்குள்ளான புதிய நபர்கள் அடையாளம் காணப்படுவது இல்லாத நிலையில், அங்கு கொரோனா பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் சீன நகரமான உகானில், கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டவர்கள் வெளியூர்களுக்கு பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பேருந்து உள்ளிட்ட பொது போக்குவரத்துக்கள் திறக்கப்பட்டுள்ளன. உகானிலிருந்து பெய்ஜிங் உள்ளிட்ட சீனாவின் மற்ற பகுதிகளுக்கு 200 விமானங்கள் புறப்படத் தயாராக உள்ளன. இவற்றின் மூலம் 10,000 பேர் வரை நகரை விட்டு வெளியேறலாம் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

மேலும், கிட்டத்தட்ட 100 அதிவேக தொடரூந்துகள் உகானிலிருந்து மற்ற நகரங்களுக்குச் செல்ல தயார் நிலையில் உள்ளன. விமானம் மற்றும் தொடரூந்துகள் மூலம் 65 ஆயிரம் பேர் உகானை விட்டு வெளியேறியுள்ளர். இதேபோல் சாலைப் போக்குவரத்தும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. தளர்வை வரவேற்கும் விதமாக அன்று இரவே கட்டடங்களில் வண்ண விளக்குகளைப் பரவவிட்டு தங்கள் மகிழ்ச்சியை உகான் மக்கள் வெளிப்படுத்தினர்.

பகிர்ந்துகொள்ள