கடந்த வாரம், பொது சுகாதார நிறுவனம் (FHI), கொரோனா வைரஸால் பாதிப்பு உள்ளது என்று சந்தேகிக்கும் அனைத்து மக்களுக்கும் இனி சோதனை செய்யப்படக்கூடாது என்று முடிவு செய்தது .
சுகாதார பணியாளர்கள் மற்றும் குறிப்பிட்ட நோயாளி குழுக்களை சோதிப்பதற்கே இப்போது முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
நீங்கள் இந்த குழுக்களில் ஒன்றில் இல்லை, ஆனால் அறிகுறிகள் இருந்தால், அறிகுறிகள் நீங்கிய பின்னரும் நீங்கள் ஒரு நாள் வீட்டிலேயே இருக்கவேண்டும்.
ஆனால், இன்று ஞாயிறு, கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கும் நபர்கள், தங்களை இணையத்தில் பதிவு செய்யுமாறு FHI அழைப்பு விடுத்துள்ளது.
வைரஸ் பரவுவது குறித்து சுகாதார அதிகாரிகள் சிறந்த மேலோட்டத்தை பெற இந்த தரவுகள் உதவும் என்றும், நோய்த்தொற்றின் சந்தேக அறிகுறிகளையும் அங்கு தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
நோய்த்தொற்று சந்தேகம் இருப்பின் இங்கே தெரிவிக்கலாம்: Helsenorge.no