“கொரோனா” தொற்று வரைமுறைகளில் மாற்றம்!

You are currently viewing “கொரோனா” தொற்று வரைமுறைகளில் மாற்றம்!

நோர்வேயின் “கொரோனா” தொற்று வரைமுறைகளில் சில மாற்றங்கள் செய்வதாக நோர்வேயின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வீடுகளில் இலகுவாக செய்யக்கூடிய “விரைவு சோதனை” யில், ஒருவர் தொற்றுக்கு ஆளாகியிருப்பதாக தெரியவரும் பட்சத்தில், குறித்த நபர் மூன்று தடுப்பூசிகளை பெற்றிருந்தாலோ, அல்லது இரண்டு தடுப்பூசிகளை பெற்றும், அதேவேளை முன்னதாக “கொரோனா” தொற்றுக்கு ஆளாகியிருந்தால் இவர்கள் “PCR” பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் அதிகரித்து வரும் “ஓமிக்ரோன்” பரவலினால், நாடு முழுவதிலுமுள்ள பரிசோதனை நிலையங்களில் அதிகளவிலான மக்கள் பரிசோதனைக்காக ஒன்றுகூடுவதால் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருவது உள்ள நடைமுறை சிக்கல்களையடுத்தே இம்முடிவு எடுக்கப்படுவதாகவும், மூன்று தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டவர்களும், ஏற்கெனவே “கொரோனா” தொற்றுதலுக்கு ஆளாகியதோடு, இரண்டு தடுப்பூசிகளை பெற்றவர்களுக்கும் தகுந்த எதிர்ப்பு சக்தி அவர்களது உடல்களில் இருப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply